மிக குறைந்த விலையில் அமேசானில் கிடைக்கும் ஆப்பிளின் M1 MacBook Air..

கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த எம்-சீரிஸ் ப்ராசஸர்களுடன் கூடிய முதல் எம்1 மேக்புக் ஏரை-ஐ (M1 MacBook Air) அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து M1 மேக்புக் ஏர் உலகின் மிகவும் பிரபலமான லேப்டாப்களில் ஒன்றாக மாறியது.

அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்திய போதிலும், ஆப்பிள் நிறுவனம் எம்1 மேக்புக் ஏரை-ஐ தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் அமேசானில் விரைவில் துவங்க உள்ள நிலையில், இதில் எம்1 மேக்புக் ஏரை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் எம்1 மேக்புக் ஏரை-ஐ ரூ.92,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் பின்னர் இதன் விலையை ரூ.99,900-ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

எம்1 மேக்புக் ஏரை லேப்டாப்பை இப்போது அசல் விலையை விட ரூ.30,000 குறைத்து அமேசான் ரூ.69,900-க்கு விற்று வருகிறது. மேலும் purchase value ரூ.1,00,000-க்கு மேல் இருந்தால், SBI கார்டுகளை பயன்படுத்தி யூஸர்கள் ரூ.5,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை பெறலாம். குறைந்தப்பட்ச purchase value ரூ.50,000-ம் என்றால் SBI யூஸர்கள் ரூ.1,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை பெறலாம் அப்படி என்றால் M1 MacBook Air-ஐ நீங்கள் SBI கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்.

இதனைத்தொடர்ந்து இதன் விலை ரூ.67,500-ஆக குறையும். ஒருவேளை உங்கள் அமேசான் கார்ட்டில் வாங்குவதற்கு மேலும் சில பொருட்கள் இருந்து, அவற்றின் விலைகள் எல்லாம் சேர்ந்து ரூ.1 லட்சம் என்ற விலையை எட்டினால், M1 மேக்புக் ஏரின் விலை ரூ.64,900-ஆக மேலும் குறைத்து கொள்ளலாம். M1 மேக்புக் ஏர் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத குறைந்த விலை இது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தவிர எம்1 மேக்புக் ஏரை வாங்குவோருக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. பழைய லேப்டாப்களுக்கு Amazon வழங்கும் அதிகப்பட்ச எக்ஸ்சேஞ்ச் வேல்யூ ரூ.11,250 ஆகும். Intel i5-ல் இயங்கும் பழைய மேக்புக்கிற்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வெறும் ரூ.7,700-ஆக உள்ளது. Deal of the Day ஆஃபரின் கீழ்எம்1 மேக்புக் ஏரை-ஐ அமேசான் லிஸ்ட் செய்துள்ளது. இருப்பினும் வரவிருக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையின் போது, listed price-ல் இது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் அதிகாரப்பூர்வமாக வரும் அக்டோபர் 8-ஆம் தேதி துவங்க உள்ளது. எனினும் பிரைம் மெம்பர்ஸ்களுக்கு இந்த விற்பனை திருவிழாவிற்கான அக்சஸ் ஒருநாள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 7-ஆம் தேதியே துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Previous Post Next Post