ரயில் முன் பாய்ந்த பாலியல் குற்றவாளி; பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை! - என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் மனநிலைப் பாதிக்கப்பட்டவர். அவரின் பெற்றோர் தினமும் கூலிவேலைக்குச் செல்லும் போது, வீட்டில் அந்தப் பெண் மட்டும் தனியாக இருப்பார். இதைத் தெரிந்துகொண்ட அதே ஊரைச் சேர்ந்த 60 வயதான கோவிந்தன், 52 வயதான மாணிக்கம் ஆகிய இருவரும், அடிக்கடி வீட்டுக்குச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண் கர்ப்பமடைந்திருக்கிறார். நாளடைவில் வயிறு பெரிதாக, மகளை மருத்துவர்களிடம் அழைத்துச்சென்று பரிசோதித்தபோதுதான், அவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

அதிர்ந்துபோன பெற்றோர், 0வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸில் கடந்த 5-ம் தேதி புகாரளித்தனர். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில், கோவிந்தன், மாணிக்கம் இருவர் மீதான புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துப் பேசும் கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை மிரட்டியிருக்கின்றனர். காவல் நிலையத்தில், அதுவும் இன்ஸ்பெக்டர் முன்னிலையிலேயே மிரட்டிப் புகாரை திரும்பப் பெறச்செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

Previous Post Next Post