பாலஸ்தீனத்தின் காஸா நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்த விவகாரத்தில் பல ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கு மத்தியில் யுத்தம் நடந்து வருகிறது. நேற்று காலை முதல் பாலஸ்தீனத்தின் போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தி வருகிறது. ஏறத்தாழ 22 இடங்களில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் குழுப் போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். இந்த நிலையில், ஹமாஸ் குழு ஒரு பெண்ணைக் கொன்று, அவரின் உடலை நிர்வாண நிலையில் எடுத்துச் செல்லும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது.

வீடியோவில் அந்தப் பெண் உடலின்மீது ஹமாஸ் குழுவினர், தங்கள் கால்களை வைத்துக் கொண்டிருந்திருக்கின்றனர். அந்த வீடியோ குறித்து ஹாமஸ் குழு, “இந்தச் சடலம் இஸ்ரேலியே ராணுவ வீராங்கனையுடைது” எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஹமாஸ் குழுவினரால் கொல்லப்பட்டு, நிர்வாண நிலையில் எடுத்துச் செல்லப்பட்ட உடல், தன்னுடைய மகளுடையது என ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவில் அந்தப் பெண், “பச்சை குத்தும் கலைஞரான என் மகள் பெயர் ஷானி லூக். அது நிச்சயமாக ஷானிதான். ஒரு இசை நிகழ்ச்சிக்காக இஸ்ரேலுக்குச் சென்றிருந்தாள். என் மகளின் உடலை மட்டுமாவது திரும்ப ஒப்படைத்துவிடுங்கள்.
