சீனாவின் ஐடெல் நிறுவனம் இரண்டு புதிய 5ஜி மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஐடெல் எஸ்23+, ஐடெல் பி55 5ஜி ஆகிய போன்கள் மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல அம்சங்கள் நிறைந்த குறைந்த விலை 5ஜி போன் சந்தையில் தனது பெயரையும் itel நிறுவனம் நிலை நிறுத்தியுள்ளது. இதில் ஐடெல் எஸ்23+ ஃபோன் 4ஜி இணைப்புடனும், ஐடெல் பி55 5ஜி இணைப்புடனும் இருக்கிறது. 4ஜி மொபைல் யுனிசோக் சிப்செட் கொண்டும், 5ஜி மொபைல் மீடியாடெக் சிப்செட் உடனும் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், புதிய ஐடெல் ஸ்மார்ட்போன்களின் விலை விவரம், சிறப்பு அம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.
ஐடெல் எஸ்23+ அம்சங்கள் :
புதிய itel S23+ ஸ்மார்ட்போனில் முழுஅளவு கொண்ட எச்டி+ அமோலெட் திரை 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இது பக்கவாட்டில் வளைந்த வடிவத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திரை அடர்த்தி 388 PPI ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை யுனிசோக் டைகர் 616 சிப்செட், மாலி-ஜி57 எம்பி1 கிராபிக்ஸ் யூனிட்டுடன் இயக்குகிறது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஐடெல் ஓஎஸ் 13 இதில் இயங்குதளமாக உள்ளது.
மேலும், 8ஜிபி ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. இந்த ஃபோனின் கேமரா அமைப்பு ஐபோனை போன்று காட்சி அளிக்கிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சாரும், ஒரு ஏஐ கேமராவும் என இரண்டு கேமராக்கள் ஃபிளாஷ் லைட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்காக 32 மெகாபிக்சல் சென்சார் பஞ்ச் ஹோலில் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலை திறன்பட இயக்க 5,000 mAh பேட்டரியும், அதனை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.
ஐடெல் பி55 5ஜி அம்சங்கள் :
இந்த 5ஜி ஃபோனில் 6.6 இன்ச் எச்டி+ ஐஎஸ்பி எல்சிடி தொடுதிரை, 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 5ஜி சிப்செட், மாலி ஜி57 எல்பி2 கிராபிக்ஸ், 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஐடெல் ஓஎஸ் 13 இயங்குதளம் ஆகிய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனை இயக்குகின்றன. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சாரும், ஒரு ஏஐ கேமராவும் என இரண்டு கேமராக்கள் ஃபிளாஷ் லைட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் சென்சார் பஞ்ச் ஹோலில் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலில் 10 5ஜி பேண்டுகளின் ஆதரவு உள்ளன. ஐடெல் எஸ்23+ ஃபோனைப் போன்றே இதிலும் 5,000 mAh பேட்டரியும், அதனை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புதிய ஐடெல் ஸ்மார்ட்போன்களின் விலை என்ன?
ஐடெல் எஸ்23+ 4ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.13,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், பி55 5ஜி மொபைலின் 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.9,699 ஆகவும், 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.9.999 ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. 4ஜி ஃபோன் எலமென்டல் ப்ளூ, லேக் சியான் ஆகிய இரண்டு நிறங்களிலும், பி55 5ஜி ஃபோன் கேலக்ஸி ப்ளூ, மின்ட் ஷேட்ஸ் ஆகிய நிறங்களிலும் விற்பனைக்கு வருகிறது. இதில் ஐடெல் எஸ்23+ அக்டோபர் 6ஆம் தேதியும், ஐடெல் பி55 5ஜி அக்டோபர் 4ஆம் தேதியும் அமேசான் இந்தியா ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
