உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன் யூஸர்கள் பயன்படுத்தி வரும் முக்கிய இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆன்லைனில் மோசடி செய்வோரின் (ஸ்கேமர்களின்) இலக்காக சமீப நாட்களாக வாட்ஸ்அப் மாறி இருப்பது யூஸர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
கண்டிப்பாக நீங்களும் வாட்ஸ்அப் பயன்படுத்துபவராக தான் இருப்பீர்கள். அப்படி என்றால் வாட்ஸ்அப்பில் நடக்கும் மோசடிகள் பற்றி உங்களுக்கும் கவலை இருக்கும். இங்கே வாட்ஸ்அப் மோசடிகளை எப்படி எளிதாகக் கண்டறியலாம் என பார்க்கலாம்.
பொதுவாக மோசடி நபர்கள் மக்களை அவர்களது முக்கிய தகவல்களை வெளிப்படுத்த வைக்கவும், கால் ஃபார்வேடிங் ஆப்ஷனை எனேபிள் செய்ய வைக்கவும், கவனக்குறைவாக வாட்ஸ்அப் அக்கவுண்ட்களுக்கான அக்சஸை வழங்க வைக்கவும் புதிது புதிதாக பல யுக்திகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் சில மோசடிகளை பற்றி பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட சில வாட்ஸ்அப் மோசடிகள் பற்றி பார்ப்போம்.
வேலைவாய்ப்பு மோசடி :
லாபகரமான வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி அனுப்பப்படும் வாட்ஸ்அப் மெசேஜ்களை கண்டு ஒருபோதும் ஏமாற வேண்டாம். ஏனென்றால் பொதுவாக மக்களை நம்ப வைத்து ஏமாற்றி பணம் பறிக்க சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தும் ஒரு பொதுவான மோசடி வழி இதுவாகும். முதலில் லாபகரமான வாய்ப்பு என்று கூறி குறைந்த பணத்தை முதலீடாக போட சொல்வார்கள். உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக ஓரிரு முறை கணிசமான அளவில் பணம் வழங்குவார்கள். பிறகு சற்று அதிக தொகையை முதலீடு செய்ய சொல்லி பிறகு உங்கள் பணத்தை சுருட்டி கொடு கம்பி நீட்டி விடுவார்கள். பணத்தோடு சில நேரங்களில் உங்களின் முக்கிய தகவல்களும் கூட அவர்கள் வசம் சென்றுவிடும்.
ஐபோன் கிஃப்ட் மோசடி:
இ-மெயில் ஐடி-க்கள் மற்றும் பாஸ்வேர்டுகளை திருட பயன்படுத்தப்படும் மற்றொரு பொதுவான மோசடி முறை இதுவாக உள்ளது. 5 நபர்களுடன் மற்றும் அவர்களின் இ-மெயில் ஐடிக்களுடன் மெசேஜை ஷேர் செய்தால் , புதிய ஐபோன் 15 மொபைல் கிஃப்ட்டாக கிடைப்பது உறுதி என்பது போன்ற வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ் உங்களுக்கு எப்போதாவது வந்திருக்கிறதா? இல்லை என்றால் நிம்மதி, ஒருவேளை எதிர்காலத்தில் பரிசுகள் வழங்க உங்கள் தனிப்பட்ட விவரங்களை அனுப்புமாறு கேட்கும் தேவையற்ற லிங்குகள் வாட்ஸ்அப்பில் வந்தால் ஒருபோதும் நம்ப வேண்டாம்.
ஆப்ஸை டவுன்லோட் செய்ய சொல்லும் மெசேஜ் :
மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற பல அட்வான்ஸ்ட் மெத்தட்ஸ்களை பயன்படுத்துகின்றனர். அவற்றில் ஒன்று பேங்க் ஆப்ஸ்களின் APK ஃபைல்ஸ்களை மோசடி நபர்கள் தங்களால் தயார் செய்யபட்ட malicious code-ஆல் அவற்றை மாற்றியமைத்து, மக்களுக்கு அவற்றை வாட்ஸ்அப் மூலம் லிங்க்ஸ்களாக அனுப்புகிறார்கள். இப்படி அனுப்பும் போது ஸ்கேமர்கள் தங்களை பேங்க் ஏஜெண்ட்ஸ்களாக காட்டி கொள்கிறார்கள். மேலும் போலியான ஃபிஷிங் வெப்சைட்ஸ்கள் மூலம் தொடர்புகொண்டு, சப்போர்ட்டிற்காக app-ன் லிங்கை அனுப்புவது போல அனுப்பி இன்ஸ்டால் செய்ய சொல்லி கேட்கிறார்கள். இதனை நம்பும் பலர் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட லிங்க்ஸை கிளிக் செய்து ஆப்ஸை இன்ஸ்டால் செய்து தங்களது பேங்க் தகவல்களை என்டர் செய்வார்கள். நீங்கள் இதை ஒருபோதும் செய்யாதீர்கள்.
சர்வதேச எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் கால்:
சமீபநாட்களாக இன்டர்நேஷனல் நம்பர்களில் இருந்து வாட்ஸ்அப்-ல் கால்ஸ்களை பல யூஸர்கள் பெற்றனர். உங்களுக்கும் இத்தகைய நம்பர்களில் இருந்து வாட்ஸ்அப்பில் கால்ஸ் வந்தால் ஒருபோதும் அதனை எடுத்து பேச வேண்டாம். அதற்கு பதிலாக குறிப்பிட்ட அந்த நம்பரை ரிப்போர்ட் செய்து பிளாக் செய்து விடுங்கள். இதுபோன்ற கால்ஸ்களை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரேண்டம் லிங்க்ஸ்களை கிளிக் செய்யாதீர்கள் :
ஹேக்கர்கள் மற்றும் சைபர் கிரைமினல்கள் நம்மை மோசடிக்கு ஆளாக்க கூடிய லிங்க்ஸ்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்புவது பொதுவாக நடக்கும் ஒன்று. ஹேக்கர்களால் அனுப்பப்படும் இதுபோன்ற லிங்க்ஸ்களை கிளிக் செய்வதன் மூலம் அது நம்மை ஒரு ஃபிஷிங் வெப்சைட்டிற்கு அழைத்து செல்லும். இது நமது டிவைஸை நேரடியாக பாதிக்க கூடிய மோசடி ஆகும். இதன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சேமிப்புகள் முழுவதுமாக மோசடி நபர்களின் கைகளில் சிக்க கூடும். எனவே வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்களில் மோசடி லிங்க்ஸ் இருக்க கூடும் என்பதால் கவனம் தேவை.
Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி.?
இத்தகைய வாட்ஸ்அப் மோசடிகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க, வாட்ஸ்அப் வழங்கும் two-factor authentication போன்ற பாதுகாப்பு அம்சங்களை எனேபிள் செய்யலாம். அதே போல தேவையற்ற லிங்க்ஸ்களை கிளிக் செய்வதை அல்லது உங்களைத் தொடர்பு கொள்ளும் தெரியாத நபர்களுடன் உங்களது தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
