விவோ வி29, வி29 புரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

Last Updated : 04 Oct, 2023 10:33 PM

Published : 04 Oct 2023 10:33 PM
Last Updated : 04 Oct 2023 10:33 PM

விவோ வி29 சீரிஸ்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி29 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வி29 மற்றும் வி 29 புரோ போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ ‘வி’ சீரிஸ் போன்களில் வி29 மற்றும் வி29 புரோ மாடல் போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வி29 சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் திரை அளவு
  • AMOLED டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி
  • 50+8+2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 4,600mAh பேட்டரி
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ.32,999
  • 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ.36,999

வி29 புரோ சிறப்பு அம்சங்கள்

  • டிஸ்பிளே, பேட்டரி, இயங்குதளம் ஆகியவை வி20 மாடல் போனில் இருப்பதை போலவே உள்ளது
  • 50+8+12 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • மீடியாடெக் டிமான்சிட்டி 8200 சிப்செட்
  • 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ.39,999
  • 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ.42,999
— vivo India (@Vivo_India) October 4, 2023

தவறவிடாதீர்!



Previous Post Next Post