சியோமி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ரெட்மி, இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது. இவர்களின் பிரபலமான நோட் சீரிஸ், மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்ற ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இந்நிலையில், நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ரெட்மி நோட் 12 5ஜி ஃபோனின் விலை அமேசான், ஃபிளிப்கார்ட் தளங்களின் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், அமோலெட் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் அடங்கிய இந்த ஸ்மார்ட்போனை எப்படி ரூ.11 ஆயிரத்துக்கு வாங்கலாம் என்பதை பார்ப்போம். அதற்கு முன்பாக இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.17,999 என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டே, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆகிய தள்ளுபடி விற்பனை தினங்களுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. மொபைல்கள், கணினிகள், ஸ்மார்ட் டிவிக்கள், மின்னணு உபகரணங்கள், துணிமணிகள் என பல வகை தயாரிப்புகளுக்கு இந்த தினங்களில் வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகளைப் பெறலாம். ஆனால், இதற்கு முன்பாகவே சில நிறுவனங்கள் தங்களின் சலுகைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தான் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானபோது, இதன் 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.17,999 ஆகவும், 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.19,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ரெட்மி நோட் 12 5ஜி சலுகை விலை
விழாகால சலுகையின் முன்னோட்டமாக தற்போது ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.15,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா தளத்தில் இது தொடர்பான விளம்பரப் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் இந்த சலுகை விலையுடன் சில வங்கி ஆஃபர்களும், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குத்துச் சண்டை களமாக மாறிய டிவி விவாத நிகழ்ச்சி… கட்டிப்புரண்ட அரசியல்வாதிகள்
மறுபுறம், இதே மாடல் ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,799 என்ற விலையில் வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதில் எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.1000 உள்பட அனைத்து வங்கி சலுகைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபுராஸ்டட் கிரீன், மேட் பிளாக், மிஸ்டிக் ப்ளூ ஆகிய மூன்று வண்ண தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொருத்தவரையில், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் முழுஅளவு எச்டி+ திறன் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 6ஜிபி வரை ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்றமைப்பு பின்புற கேமரா, 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 5,000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இரண்டு அப்டேட்டுகளை கொண்ட ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 ஸ்க்ரீன் ஆகியவை உள்ளன.
Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிக அம்சங்களைக் கொண்ட குறைந்த விலை 5ஜி ஃபோனாக சந்தையில் தற்போது ரெட்மி நோட் 12 5ஜி தனது முத்திரையைப் பதித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
