டேட்டா இல்லாமல் டிவி சேனல்களை நேரலையாக மொபைலில் பார்க்கலாம்… புதிய சேவையை கொண்டுவர மத்திய அரசு திட்டம்..

இன்டர்நெட் டேட்டா ஏதும் இல்லாமல் மொபைல் போனிலேயே டிவி சேனல்களை நேரடியாக பார்ப்பதற்கான வசதிகளை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்படும் நிலையில், இந்த சேவையை அரசு நிறைவேற்ற அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ‘இன்டர்நெட் டேட்டா’ தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள சுமார் 80 கோடி ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்கள் சமூக வலைதளங்கள், யூடியூப் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர்.

யூடியூப் உள்ளிட்ட தளங்களில் பல்வேறு டிவி சேனல்கள் நேரலையாக ஒளிபரப்பு செய்கின்றன. இந்நிலையில் இன்டர்நெட் டேட்டா ஏதும் இன்றி, மொபைல் போனிலேயே டிவி சேனல்களை நேரலையாக பார்க்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு டெலிகாம் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று பேசப்படுகிறது.

இந்த சேவையை D2M (Direct to Mobile) என்று அழைக்கிறார்கள். அதாவது வீட்டிற்கு வீடு டிடிஎச் சேவை Direct to Home இருப்பதை, அங்குள்ளவர்கள் தங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக தனி கட்டணம் ஏதும் செலுத்த தேவையிருக்காது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை தரமாக வழங்குவோருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். அதே நேரம் இன்டர் நெட் டேட்டா குறைவாக பயன்படுத்தப்படும்போது அதனால் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஓரளவு இழப்பு ஏற்படலாம். மேலும் டெலிகாம் நிறுவனங்கள் அடுத்ததாக 5ஜி சேவைகளை கொண்டு வருவதற்கு ஆயத்தம் ஆகி வருகின்றன.

இதையும் படிங்க – உஷார்.. எதிர்கால ஆபத்து.. AI மூலம் தகவல் திருடும் ஹேக்கர்ஸ்.. எச்சரிக்கை கொடுத்த FBI

இந்த 5 ஜி சேவைகளையும் டி2எம் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை அதிகரிக்கும் வகையில் இந்த டி2எம் சேவையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது.

இதையும் படிங்க – 5G மொபைல்களுக்கு அதிரடி தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளி வீசும் பிளிப்கார்ட்!

இதன் அடுத்த கட்ட நகர்வு குறித்து விவாதிக்க மத்திய அரசு உயர் அதிகாரிகள், ஐஐடி கான்பூர் பேராசிரியர்கள், டெலிகாம் நிறுவன உயர் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Previous Post Next Post