`குறையும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!' - சுட்டிக்காட்டிய ஜூ.வி; நடவடிக்கை எடுக்க அரசு உறுதி!

கடந்த ஜூ.வி இதழில், `குறையும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்! அரசியல் தலையீடுதான் காரணமா?” என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

கடந்த பட்ஜெட்டில், “தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, மாதம் ரூ.7,500 வழங்குவோம்” என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, `நான் முதல்வன்’ போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Previous Post Next Post