Reserve Bank of India உத்தரவுப்படி வரும் செப்டம்பர் 30, 2023 பிறகு இந்தியாவில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவித்துள்ளது. மக்கள் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அவர்களின் வங்கிக்கு சென்று வங்கி கணக்கில் மாற்றிக்கொள்ளலாம்.
தற்போது Amazon நிறுவனம் இதற்காகவே ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ‘Cash Load at Doorstep’ என்ற இந்த திட்டம் மூலம் KYC செய்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி ஏஜெண்ட்களை அனுப்பி மீதம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை அமேசான் பெரும்.
தற்போது Amazon நிறுவனம் இதற்காகவே ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ‘Cash Load at Doorstep’ என்ற இந்த திட்டம் மூலம் KYC செய்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி ஏஜெண்ட்களை அனுப்பி மீதம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை அமேசான் பெரும்.
மக்கள் கொடுக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் Amazon Pay Balance பணமாக அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நம்மால் Amazon Pay Balance கணக்கில் ஏற்றமுடியும். இந்த 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் வருகையை பொறுத்து செப்டம்பர் 30, 2023 வரை இந்த கால அவகாசம் இருக்குமா? அல்லது நீட்டிக்கப்படுமா? என்பது தெரியவரும்.

எப்படி Cash Load At Door step’ பயன்படுத்துவது?
- இதை செய்ய நீங்கள் Amazon KYC வாடிக்கையாளராக இருக்கவேண்டும். அதற்கு முதலில் நீங்கள் KYC செய்யவேண்டும்.
- முதலில் 5 நிமிடங்கள் Video KYC செய்யவேண்டும்.
- இதற்கு உங்களின் செல்பி புகைப்படம் மற்றும் PAN கார்டு தேவை.
- பின்னர் உங்களின் ஆதார் கார்டு எண்ணை உள்ளிட்டு அதன் பிறகு அமேசான் ஏஜென்ட் ஒருவரிடம் வீடியோ கால் பேசவேண்டும்.
- KYC செய்ய எந்த ஒரு கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை.
- அதன் பிறகு Cash On delivery ஆர்டர் ஒன்றை Amazon மூலம் மேற்கொள்ளவும்.
- உங்கள் டெலிவரியை எடுத்துவரும் ஏஜென்ட்டிடம் நீங்கள் வைத்திருக்கும் பணத்தை கொடுத்து Amazon Pay balance பணமாக உடனடியாக மாற்றிக்கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்
