இப்போ தேர்ட் இயர் படிக்கிறேன். எட்டு பேர் எங்க கேங்ல. அதுல மூணு பேர் பசங்க. ஆனா அவங்க பெயரை பொண்ணுங்க பேர்லயே மொபைலில் சேவ் பண்ணியிருக்கேன். இதில் ஆரம்பிச்சு, பசங்களோட பர்த் டே பார்ட்டிக்கு ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து போறது, பசங்க, பொண்ணுங்கனு நாங்க சேர்ந்து சின்ன சின்ன அவுட்டிங் போறது, என்னோட க்ரூப் புராஜெக்டில் ரெண்டு பசங்களும் இருக்கிறதுனு… இதையெல்லாம் ஒவ்வொண்ணா நான் வீட்டில் மறைச்சிட்டே வர்றேன்.
ஒரு கட்டத்துல, ‘நாம என்ன தப்புப் பண்றோம்? ஏன் இதையெல்லாம் மறைக்கணும்? ஒரு ஹெல்தி ஃப்ரெண்ட்ஷிப்பை அக்சப்ட் பண்றதுல நம்ம பேரன்ட்ஸ் ஏன் இவ்வளவு பிற்போக்குத்தனத்தோட, பிடிவாதத்தோட இருக்கணும்? இவங்களோட மைண்ட் செட் தப்புனு எப்படி இவங்களுக்குப் புரிய வைக்கிறது? நாளைக்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போது, அங்கயும் நாலு ஆண்களோட வேலை பார்த்துத்தானே ஆகணும்? அப்போவும், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ சொல்லித்தான் வீட்டில் வேலைக்கு அனுப்புவாங்களா? இதுக்கெல்லாம் தீர்வுதான் என்ன?’னு மனசுல கேள்விகள் முளைச்சிட்டே இருக்கு.

ஃப்ரெண்ட்ஷிப்ங்கிற பேர்ல லவ் டிராக் ஓட்டுற பொண்ணுங்களை தயவு செஞ்சு இந்த கேட்டரிக்கு கொண்டு வந்து அறிவுரை பண்ண வேண்டாம். நான் பேசுறது, நேர்மையான ஃப்ரெண்ட்ஷிப் பத்தி. என்னோட நிலமையில் இருக்கிற தோழிகள்தான் நீங்களும்னா, நிச்சயம் நாம நம்ம பேரன்ட்ஸ்கிட்ட இதைப் பத்தி வெளிப்படையா பேசியே ஆகணும். எங்க பேரன்ட்ஸ் மாதிரிதான் நீங்களும்னா, தயவு செஞ்சு எங்களைப் புரிஞ்சுக்கோங்க.
A friend is a friend. இதை என் அப்பா, அம்மாவுக்குப் புரியவைக்க என்னதான் வழி?
