உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், புதிய Pixel 8 சீரிஸ் போன் மற்றும் ஆண்டிராய்டு 14 OS-யை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். மேலும் புதிய Pixel போன் ஆண்டிராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில்தான் இயங்க போகிறது எனவும் கூகுள் கூறியுள்ளது. ஏற்கனவே முந்தைய மாடல் Pixel போன்களில் புதிய ஆண்டிராய்டு OS-யை அப்டேட் செய்துகொள்ளும் வசதி தொடங்கிவிட்டது.
ஃப்ளாஷ் நோட்டிஃபிகேஷன்ஸ், பேட்டரி ஹெல்த் பெர்செண்டேஜ் போன்ற பல வசதிகள் ஆண்டிராய்டு 14-ல் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக செயலியில் உள்ள டேட்டா ஷேரிங் குறித்த எச்சரிக்கையை இந்த புதிய ஆண்டிராய்டு 14 யூசர்களுக்கு வழங்குகிறது. பிரைவசியில் கவனம் செலுத்தும் யூசர்ளுக்கு இது மிகப்பெரிய அப்டேட்டாகும்.
புதிய ஆண்டிராய்டு 14 ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துபவர்கள், இனி தாங்கள் இன்ஸ்டால் செய்துள்ள செயலி, தங்களது டேட்டாக்களை எப்படி பயன்படுத்துகிறது என்ற தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். வழக்கமாக செயலியை போனில் இன்ஸ்டால் செய்யும் போது, இருப்பிடம், மெசேஜ் போன்றவற்றை பார்க்க அந்த செயலிக்கு அனுமதி கொடுப்போம். ஒருவேளை அந்த செயலிகள் உங்கள் தகவல்களை வேறு யாருக்காவது பகிர்ந்தால் அதுகுறித்த விவரங்கள் இனி உங்களுக்கு நோட்டிஃபிக்கேஷனாக வரும். இதன்மூலம் டேட்டா ஷேரிங்கில் ஒரு வெளிப்படத்தன்மையை கொண்டு வந்துள்ளது ஆண்டிராய்டு 14.
பொதுவாக ஸ்மார்ட்போன் யூசர்கள் அனைவருமே செயலியை இன்ஸ்டால் செய்யும் போது, அதனால் ஏற்படும் விளைவுகள் தெரியாமலேயே கவனக்குறைவாக எல்லாவற்றுக்கும் அனுமதி கொடுத்துவிடுவோம். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வசதி இதை சரி செய்ய முயற்சிக்கிறது. இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம். இதுதவிர ஸ்மார்ட்போன் யூசர்களிடம் விழிப்புணர்வை அதிகப்படுத்த ஒவ்வொரு மாதமும் உங்கள் இருப்பிடம் குறித்த டேட்டா ஷேரிங் தகவல்களை ஆண்டிராய்டு 14 உங்களுக்கு தெரிவிக்கும். நம்முடைய தகவல்கள் எவ்வாறெல்லாம் பயன்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
ஏற்கனவே பல Pixel போன்களில் ஆண்டிராய்டு 14 அப்டேட் வந்துவிட்ட நிலையில், வரும் மாதங்களில் சாம்சங் கேலக்ஸி, ஒன்ப்ளஸ், ஓப்போ, விவோ, சோனி, டெக்னோ, ஜியோமி, ரியால்மீ, ஷார்ப், நத்திங், iQOO போன்ற போன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் ஆண்டிராய்டு 14 அப்டேட்டை பெற்றுவிடலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், ஆண்டிராய்டு 14 அப்டேட் வசதியை எல்லாருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் சிலவற்றை கூகுள் கொண்டு வந்துள்ளது. அதன்படி அப்டேட் குறித்த OTA கிடைக்கப் பெறாதவர்கள், உங்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் சென்று, அதில் சிஸ்டம் என்பதை தேர்வு செய்து, சிஸ்டம் அப்டேட் என்பதை க்ளிக் செய்யுங்கள். அதன்பிறகு செக் ஃபார் அப்டேட் என்ற பட்டனை க்ளிக் செய்தால் ஆண்டிராய்டு 14-க்கான அப்டேட் தொடங்கிவிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
