புதுசா ஸ்மார்ட்போன் வாங்க காசு இல்லையா..? உங்களுக்காகவே வந்திருக்கு சியோமியின் சூப்பர் திட்டம்..

கஸ்டமர்கள் டிஜிட்டல் முறையில் லோன் மூலமாக ஸ்மார்ட்போன்களை வாங்குவதை எளிதாக்க சியோமி நிறுவனம் ஈசி ஃபைனான்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி கஸ்டமர்கள் ரெட்மி ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்ளலாம்.

சியோமி இந்தியா நிறுவனம் தற்போது அதன் யூசர்களுக்கு சியோமி ஈசி ஃபைனான்ஸ் திட்டத்தை (Xiaomi Easy Finance Program – XEF) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கன்ஸ்யூமர்களுக்கு எளிமையான டிஜிட்டல் லோன் வழங்கும் திட்டமே இது. இந்த திட்டத்தை சியோமி நிறுவனம் ரெட்மி 12 ஸ்மார்ட்போனுடன் தொடங்கி வைத்துள்ளது.

இந்த ஃபைனான்ஸ் திட்டத்தை அமல்படுத்த சியோமி நிறுவனம் Axio என்ற டிஜிட்டல் கன்ஸ்யூமர் ஃபினான்சியல் சர்வீசஸ் உடன் இணைந்து செயல்படுகிறது. “நிதி குறித்த கவலை இல்லாமல் தாங்கள் விருப்பப்பட்ட லேட்டஸ்ட் சியோமி ஸ்மார்ட்போன்களை கஸ்டமர்கள் XEF மூலமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த XEF திட்டத்தை ரெட்மி 12 ஸ்மார்ட்போன்களில் இருந்து துவங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது.

சியோமி ஈசி ஃபைனான்ஸ் திட்டம் (XEF) மூலமாக கஸ்டமர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

தவணை முறையில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு ஏதுவாக இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட் காரணமாக தங்களுக்கு விருப்பமான போனை வாங்க முடியாத சூழ்நிலை பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் இந்த திட்டத்தின் அறிமுகம் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்மார்ட்போன்களை எளிமையான டிஜிட்டல் லோன் முறையில் பெற்றுக் கொள்ளவதற்கான வசதி அமைத்து தரப்பட்டுள்ளது.

XEF திட்டத்தின் கீழ், உடனடி லோன் அப்ரூவல்கள் அதே நேரத்தில் விரைவான மற்றும் எளிமையான டிஜிட்டல் செயல்முறை மூலமாக கஸ்டமர்கள் ரெட்மி ஸ்மார்ட்ஃபோன்களை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் பெரிய அளவிலான பிஸிக்கல் டாக்குமென்ட்கள் சமர்ப்பிக்க தேவையில்லை என்பதே இதன் சிறப்பம்சம்.

நோ காஸ்ட் EMI ஆப்ஷன்கள் மூலமாக ரெட்மி ஸ்மார்ட்ஃபோன்களை சொந்தமாக்கி கொள்வதற்கான வாய்ப்பு கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது. XEF திட்டத்திற்கான பலன்களை இந்தியா முழுவதும் உள்ள Mi ஹோம்ஸ், Mi ஸ்டுடியோ, Mi ஸ்டோர்ஸ் , Mi ப்ரீப்பெய்டு பார்ட்னர்கள், உள்ளூர் ரீடைல் கடைகள் மற்றும் அனைத்து அங்கீகாரம் பெற்ற அவுட்லைட்டுகளில் இருந்து கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பி. முரளி கிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்து பேசுகையில் “அனைவருக்கும் தொழில்நுட்பம் எளிதாக கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளை நாங்கள் எப்பொழுதுமே கொண்டிருக்கிறோம். சியோமி ஈசி ஃபைனான்ஸ் திட்டம் மூலமாக இந்த இலக்கை அடைவதற்கான குறிப்பிடத்தக்க ஒரு படியை நாங்கள் எடுத்து வைத்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. சௌகரியமான அதே நேரத்தில் எளிமையான பொருளாதார தீர்வுகளை கஸ்டமர்களுக்கு வழங்குவதில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்களது லொகேஷன் பற்றிய கவலை இல்லாமல் தடையில்லாத டிஜிட்டல் அனுபவத்தை பெறுவதற்கு ரெட்மி ஸ்மார்ட்ஃபோன்களை சொந்தமாக்கி கொள்வதற்கான வாய்ப்பு இந்த திட்டம் மூலமாக கஸ்டமர்களுக்கு கிடைத்துள்ளது என்று கூறினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Previous Post Next Post