சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பிடிப்பட்ட உலகின் நீளமான மலைப்பாம்பு! சிறப்புகள் என்ன தெரியுமா?

இந்தியாவில் நிக்கோபார் தீவுகளில் வாழும் அரிய வகை பாம்பு ஒன்று சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளாகமும், கிண்டி பாம்பு பண்ணை மற்றும் குழந்தைகள் பூங்கா அருகருகே அமைந்துள்ளது. இதனால் சென்னை ஐஐடி வளாகத்தில் மான்கள் போன்ற விலங்குகள் இயல்பாகவே காணப்படும். சமீபத்தில் சென்னை ஐஐடி வளாகத்தில் 7-8 அடி நீளம் உள்ள ஒரு அரிய வகை குட்டி மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி

இது ரெட்டிகுலேட்டட் பைத்தான் (Reticulated Python) என்னும் மலைப்பாம்பு ஆகும். இந்த மலைப்பாம்பு தமிழில் ராச மலைப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு வகைகளிலேயே, ரெட்டிகுலேட்டட் பைத்தான் வகை பாம்பு தான் மிகவும் நீளமான மற்றும் அதிக எடை உள்ள பாம்பு வகை ஆகும். இது இந்தியாவில் நிக்கோபார் தீவுகளில் உள்ள காடுகளில் மட்டுமே அதிகம் காணப்படும்.

இது விஷமற்ற பாம்பு வகை ஆகும். ரெட்டிகுலேட்டட் பாம்பு 1-75 எடை வரை வளரும் மற்றும் 23-29 ஆண்டுகள் வாழும். இந்த பாம்பு வகை இரவு நேரங்களில் தான் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த வகையில் பெரிய பாம்புகள் பெரும்பாலும் தரையில் இருக்கும். எப்போதாவது தான் மரத்தில் காணப்படும். ஆனால் இதன் குட்டிகள் தரை, மரம் என இரண்டிலுமே காணப்படும்.

ரெட்டிகுலேட்டட் பாம்பு

இந்த பாம்பு வகை மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும் என்றாலும், நன்றாக நீந்தும் திறன் கொண்டது.

சிலர் சென்னை பாம்பு பண்ணையில் இருந்து ஐஐடி வளாகத்திற்குள் சென்றிருக்கலாம் என்றும், இன்னும் சிலர் சட்டவிரோதமாக வீட்டில் பாம்பை வளர்த்த யாரேனும் பாம்பை ஐஐடி வளாகத்திற்கு அருகில் விட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். இதில் சென்னை பாம்பு பண்ணையில் இருந்து பாம்பு தப்பித்திருக்க வாய்ப்பே இல்லை என்று அதன் அதிகாரிகள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post