முன்னணி நாடுகளை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. எதில் தெரியுமா..?

உலக நாடுகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை உணர்த்தும் வகையில் பல தயாரிப்புகளின் அறிமுகத்தை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு முதற்படியாக இருப்பது ஸ்மார்ட்போன்கள். ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக மூத்த பகுப்பாய்வு நிபுணர் இவான் லாம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியா பல துறைகளில் முத்திரை பதித்து வரும் நிலையில், அனைத்து விதமான பொருளாதார சவால்களுக்கும் தன்னை தயார்படுத்தி வருவதை இந்த தகவல் உணர்த்தியுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்களும் உள்நாட்டில் பெருவாரியாக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இங்கு தயாரிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெறுவதாக கவுண்டர்பாய்ன்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 2023 ஆண்டில் 22 விழுக்காடு வரை அசெம்பிள் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கவுண்டர்பாய்ன்ட் கணித்துள்ளது.

இருப்பினும், சீனாவின் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நீண்ட காலத்திற்கு முக்கிய பங்கை வகிக்கும் என்று அதை தக்கவைத்துகொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மூத்த ஆய்வாளர் இவான் லாம் கூறினார். ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியின் நிறைவாக, நடப்பு நிதியாண்டில் (FY24) ஏப்ரல் முதல் ஆகஸ்ட் காலகட்டத்தில் 5.5 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடிக்கு மேல்) மதிப்புள்ள மொபைல் போன் ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டுள்ளதாக அரசு மற்றும் தொழில்துறை சார்ந்த தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன.

வர்த்தகத் துறை, இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) ஆகியவற்றின் மதிப்பீட்டின்படி, 2022-23 நிதியாண்டில் மொபைல் போன்கள் ஏற்றுமதி 3 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 25,000 கோடி) ஆக இருந்தது. 2023-24 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் காலகட்டத்தில் 5.5 பில்லியன் டாலராக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இது விரைவில் ரூ.1,20,000 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி 2024ஆம் நிதியாண்டில், மொத்த மொபைல் ஏற்றுமதியில் 50 விழுக்காடு அளவை உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில் வெளியான அறிக்கையின்படி, அசல் வடிவமைப்பு உற்பத்தியாளர்கள் (ODMs) தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் 6 விழுக்காடு அளவு குறைந்துள்ளது என்பதும் புலப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி சரிவில் சாம்சங், சியோமி, லெனோவோ ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இருப்பினும், விவோ, ஹானர், டிரான்சிசன் குரூப் ஆகிய நிறுவனங்களின் ஏற்றுமதி ஏற்றம் கண்டதால் சரிவின் ஒரு பகுதி மீட்சி கண்டுள்ளதாக மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் ஷெங்காவ் பாய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வரும் காலங்களில் இந்தியா முழுமையான ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Previous Post Next Post