இந்த இரண்டு பாகத்திலும் பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடித்திருந்தார். வில்லனிஸம் நிறைந்த ஹீரோ கதாபாத்திரமான ‘Don’, ஷாருக்கானுக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போனது. ரசிகர்களும் இதைக் கொண்டாடித் தீர்த்தனர். இதைத்தொடர்ந்து இதன் மூன்றாவது பாகத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிற, இயக்குநர் ஃபர்ஹான் அக்தரும் அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் தீவிரமாக இறங்கினார்.
ரசிகர்களும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கானைப் பயங்கரமான வில்லனிஸம் நிறைந்த ஹீரோ கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ‘Don3’யில் ஷாருக்கான் நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, அவருக்குப் பதிலாக வேறொரு நடிகர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகப் பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் தற்போது இயக்குநர் ஃபர்ஹான் அக்தர், ‘Don 3’ திரைப்படத்திற்கான முதல் அப்டேட்டைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் ஷாருக்கானுக்குப் பதிலாக வேறொரு முன்னணி பாலிவுட் நடிகர் டானாக நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
