விண்வெளி வீரர்கள் சந்திரனுக்கு செல்ல தயாராகும்போது, கடுமையான நிலைமைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நியூ-ஜென் விண்வெளி உடைகள் அவர்களுக்கு பொருத்தப்படும்.
இருப்பினும், இந்த உடைகள் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் மாறும். குறிப்பாக விண்வெளி வீரர்கள் உடைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இதை சரி செய்ய, ஆஸ்திரிய ஸ்பேஸ் ஃபோரம், பெரிய ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) முயற்சியான PExTex-ன் கீழ், உடையின் உட்புறம் நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்க BACteRMA என்ற ப்ராஜெக்டை வழிநடத்துகிறது.
நிலவில் நடப்பவர்கள் எதிர்கொள்ளும் வெளிப்புற ஆபத்துகளில் கடினமான வெற்றிடம், வெப்பநிலை உச்சநிலை, விண்வெளி கதிர்வீச்சு மற்றும் தூசி ஆகியவை அடங்கும். “உங்கள் உள்ளாடைகளை சுத்தமாக வைத்திருப்பது பற்றி யோசியுங்கள். தினசரி அடிப்படையில் போதுமான எளிதான வேலை. சலவைத்தூள், சலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்திகளுக்கு நன்றி” என்று ESA பொருட்கள் மற்றும் செயல்முறைகள் பொறியாளர் மல்கோர்ஸடா ஹோலின்ஸ்கா விளக்குகிறார்.
“கூடுதலாக, ஸ்பேஸ்சூட்கள் வெவ்வேறு விண்வெளி வீரர்களுக்கு இடையே பகிரப்படும், மேலும் நுண்ணுயிரிகளுக்கு சாதகமான சூழ்நிலையில் பயன்படுத்தப்படுவதற்கு இடையில் நீண்ட நாட்கள் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அதற்குப் பதிலாக நுண்ணுயிர் வளர்ச்சியைத் தவிர்ப்பதற்கு மாற்றுத் தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்” என்று ஹோலின்ஸ்கா மேலும் கூறினார்.
இதை எதிர்த்து, பிரான்சின் Compagnie Maritime d’Expertises (COMEX) தலைமையிலான PExTex திட்டம், அதிக வலிமை கொண்ட Twaron மெட்டீரியல் போன்ற ஜவுளிகளை சோதித்து வருகிறது. PExTex குழுவானது குறைந்தபட்சம் 2,500 மணிநேர மேற்பரப்பைத் தாங்கக்கூடிய ஒரு விண்வெளி உடையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்ட்ரா-ஹை வெற்றிட வெளிப்பாடு, மின் வெளியேற்றம், வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் நிலவு தூசி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு பொருட்களை உட்படுத்துவது இதில் அடங்கும்.
இதற்கிடையில், BACTERMA குழு விண்வெளி உடைகளின் உட்புறத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. வெள்ளி அல்லது தாமிரம் போன்ற பாரம்பரிய நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்கள் காலப்போக்கில் தோல் எரிச்சல் மற்றும் கறையை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, சுய-பாதுகாப்பிற்காக நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் இரசாயன கலவைகள் அடங்கிய ‘இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றங்களுக்கு’ திரும்பியது குழு.
பெரும்பாலும் வண்ணமயமான கலவைகள் ஆண்டிபயாடிக் குணங்களைக் கொண்டிருக்கின்றன மற்றும் துணிக்கு சாயமிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. BACteRMA திட்டம் பல்வேறு ஜவுளிப் பொருட்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்திறனைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற்றுள்ளது. OwEF இயக்குனர் Gernot Gromer, “PExTex மற்றும் BACteRMA-ன் கண்டுபிடிப்புகள் நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகள் மற்றும் ஸ்மார்ட் டெக்ஸ்டைல் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் எதிர்கால முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கின்றன” என்றார்.
ஜெர்மன் ESA விண்வெளி வீரர் மத்தியாஸ் மௌரர் PExTex மற்றும் BACTERMA முடிவுகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
