முன்னதாக, சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மையக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், கோவை குண்டுவெடிப்பு தொடர்பான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்த கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் முன்வைத்தார்.
அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தீவிரவாதத்துக்கு வண்ணம் கிடையாது. தீவிரவாதத்தை ஒரு சமுதாயத்துக்குள், சாதிக்குள், மதத்துக்குள் அடைக்க வேண்டாம். கோவை குண்டுவெடிப்பை தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை வெளியில் விடக் கூடாது. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிகள்தான். இன்னும் அங்கு தீவிரவாதம் ஒழியவில்லை, அப்படியே இருக்கிறது. ஏனெனில், சமீபத்தில்தான் கோவையில் தற்கொலை குண்டுவெடிப்பு நடந்து 13 பேர் கைதாகி, இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் யாரையும் வெளியில் விடக் கூடாது என்பதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு. நான் இதை இஸ்லாமியர்களுக்குள் அடைக்க விரும்பவில்லை. அன்றைக்குச் செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கலாம். ஆனால், இன்றைக்கு அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் விடுதலை செய்யக் கூடாது. அவர்கள் தீவிரவாதிகள். எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகளா என்றால் அது கிடையாது. மேலும், இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை வெளியில் விடக் கூடாது என்று நான் கூறவில்லை. தீவிரவாதிகள் என்பதால் அவர்களை வெளியில் விடக் கூடாது என்கிறேன். தமிழகத்தில் தீவிரவாதம் இன்னும் அப்படியே இருக்கிறது. மாநில அரசு அதைக் கட்டுப்படுத்தவில்லை. அதற்கான திறனும் இல்லை. இவர்கள் செய்வது சமரச அரசியல். கோவை தீவிரவாதிகளை வெளியில் விடுவது இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இதனை முதல்வர் ராஜதர்மமாக பார்த்து முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
