"என்னைக் கொன்று விடாதீர்கள்" - கதறிய இஸ்ரேல் பெண்; ஹமாஸ் குழுவால் கடத்தப்படும் பெண்கள்?!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே காஸா நிலத்துக்காக நடத்தப்படும் போரில் அப்பாவி குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். நேற்று காலை முதல் பாலஸ்தீனத்தின் போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் எதிர் தாக்குதலை நடத்தி வருக்கிறது. இரு தரப்பிலும் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். ஹமாஸ் குழுவின் முதல் தாக்குதல் இஸ்ரேலில் நடந்த இசைத் திருவிழாவில் தொடங்கியிருக்கிறது. அதில், ஹமாஸ் குழுவினாராக கருதப்படும் ஒரு கூட்டம் இசைத் திருவிழாவில் கலந்துகொண்ட நோவா ஆர்கமணி என்றப் பெண்ணைக் கடத்தி செல்லும் வீடியோ அதிகம் பகிரப்படுகிறது.

அந்த வீடியோவில், “என்னைக் கொன்று விடாதீர்கள்” எனக் கேட்கும் அந்தப் பெண், துப்பாக்கி ஏந்திய ஒருவரின் பைக் பின்னால் அமர்த்தி வைக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறார். அவரது கணவன் அவி நாதனும் ஹமாஸ் குழுவால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவி நாதனின் சகோதரர் மோஷே “என் சகோதரனையும், அவரது மனைவியையும் காணவில்லை. அவர்களை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. அவர்களை மிட்டுத்தர வேண்டும்” எனப் புகார் அளித்திருக்கிறார்.

நோவா ஆர்கமணியுடைய தோழி செய்தியாளர்களிடம்,”நோவா ஆர்கமணி மிக நல்லவள். அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. சமீபத்தில்தான் இலங்கை சென்றுவந்தாள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் இரு தரப்பினராலும் கொல்லப்படும் அப்பாவி மக்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.


Previous Post Next Post