போபால்: மன அழுத்தம்; கர்ப்பிணி டாக்டர் மயக்க மருந்தை ஊசிமூலம் செலுத்தி தற்கொலை; என்ன நடந்தது?

அவருடன் படித்தவர்கள் தெரிவிக்கையில், `சரஸ்வதி, மகப்பேறு பிரிவில் முதுகலைப்படிப்பு படித்து வந்தார். ஆனால் அவருடன் படித்த அனைவரும் தங்களது படிப்பை முடித்துவிட்டனர். சரஸ்வதி மட்டும் முடிக்கவில்லை. அவரது படிப்புக் காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்’ என்கிறார்கள்.

ஆந்திராவை சேர்ந்தவரான சரஸ்வதியுடன் பணியாற்றியவர்கள் இது குறித்து கூறும்போது, `சரஸ்வதி தயாரித்த புராஜெக்ட்டை அவர் படித்த துறையின் தலைவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார்’ என்று தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம்

மன அழுத்தம்
மாதிரிப்படம்

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர். டாக்டர் பாலா சரஸ்வதியின் கணவர் மத்திய அரசுப் பணிக்குத் தயாராகி வருகிறார்.

மும்பையில் நேற்று முன் தினம் ஆதிநாத் பாட்டீல் (27) என்ற டாக்டர், தனது விடுதியில் மயக்க மருந்தை செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் முதுகலைப்பட்டம் படித்துக்கொண்டே பணியாற்றி வந்தார். அவரும் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post