Tamil News Live Today: ரஷ்ய தலைநகர்மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்... மூடப்பட்ட விமான நிலையம்!

ரஷ்ய தலைநகர்மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்… மூடப்பட்ட விமான நிலையம்!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரானது முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. ரஷ்யாவும் மிகத் தீவிரமாக உக்ரைன்மீது போர்தொடுத்து வருகிறது. அண்மையில் அமெரிக்கா உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடிகுண்டுகளை வழங்கியிருந்தது. அதற்கு ரஷ்ய அதிபர் புதின், `எங்களிடமும் போதிய அளவில் கிளஸ்டர் குண்டுகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த தயங்க மாட்டோம்’ என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இன்று அதிகாலை உக்ரைனின் மூன்று டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒரு டிரோனை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிகிறது. மேலும், எஞ்சிய இரண்டு டிரோன்கள் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரோன்கள் மாஸ்கோவின் சர்வதேச வணிக மைய கட்டடத்தின்மீது மோதியதாகச் சொல்லப்படுறது. இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, ஆனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக விமானம் நிலையத்தை அதிகாரிகள் மூடியிருக்கின்றனர்.

Previous Post Next Post