தெரிந்த நபர் வீடியோ காலில் பேசினாலும் நாம் நம்மிடம் இருக்கும் அவரது எண்ணுக்கு அழைத்து பேசியது அவர்தானா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நபரிடம் மட்டும் அல்லாது அந்த நபரின் உறவினர்கள், நண்பர்களிடமும் பேசி தகவலை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இதுபோன்று இன்னும் பல மோசடிகள் நடக்கலாம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற மோசடி அழைப்புகள் குறித்து புகார் அளிக்க 1930 என்ற சைபர் ஹெல்ப் லைன் எண்ணுக்கு அழைக்க வேண்டும் என கேரள போலீஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த எண் 24 மணி நேரமும் செயல்படும்” என்றார்.
போன் அழைப்புக்கள் மூலம் நடந்த மோசடிகள், சமூக வலைத்தளங்களில் போலி அக்கவுண்ட் மூலம் அடுத்த கட்டத்துக்குச் சென்றது. இப்போது ஏ.ஐ தொழில் நுட்பத்தால் நேரடியாக வீடியோ காலில் பேசி மோசடியை ஆரம்பித்துள்ளனர். இதனால் தெரிந்தவர்கள் வீடியோ கால் செய்தாலும்போன் சந்தேகத்துடன் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களே இனி வீடியோகாலில் நண்பர்கள் யாரேனும் உதவி கேட்டால், ஒருமுறை அவர்களுடைய தொலைபேசி எண்ணில் அழைத்துப் பேசி உறுதிபடுத்துங்கள்.
