சேலம்: திருமணம் தாண்டிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி - தோழி உட்பட 3 பேர் கைது

சேலம், மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தறித் தொழிலாளி சுந்தர்ராஜ். இவருக்கு கடந்த எட்டு ஆண்டுக்கு முன்பு சேலம் குகை பகுதி சேர்ந்த நிவேதா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுந்தர்ராஜ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக பெங்களூரில் உள்ள சுந்தர்ராஜன் குடும்பத்தாருக்கு நிவேதா தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த சுந்தர்ராஜ் குடும்பத்தார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சுந்தர்ராஜ் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூக்கு

தூக்கு
சித்திரிப்புப் படம்

பிரேத பரிசோதனை அறிக்கையில் சுந்தர்ராஜ் கழுத்து இறுகாமல், மூச்சு திணறி இறந்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து நிவேதாவை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஜலகண்டாபுரம் ஆவலத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருடன் நிவேதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.

Previous Post Next Post